எச்சரிக்கை

" கொல கொலயா முந்திரிக்கா பவர் ஸ்டார் ர தொட்டா நீ கத்திரிக்கா "

வியாழன், 13 செப்டம்பர், 2012

பவர் ஸ்டார் நடிக்கும் படத்தில் கெளரவ வேடத்தில் சிம்பு.


சந்தானம், பவர் ஸ்டார் இணைந்து 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தானம் , ராம நாராயணன் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகிறார்கள்.

இப்படம் தொடங்கும் போது,  "முன்னணி மூன்றெழுத்து நடிகர் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்" என்று தெரிவித்து இருந்தார்கள்.

சிம்பு தான் அந்த மூன்றெழுத்து நடிகர் என்று தெரியவந்துள்ளது.

சந்தானத்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சிம்பு.  தற்போது சந்தானம் தயாரிப்பாளராக அறிமுகமாவதால் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக சிம்பு நடிக்கும் காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

புதன், 12 செப்டம்பர், 2012

ரஜினி படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் பவர் ஸ்டார்...



ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தின் ரீமேக்கை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது வேந்தர் மூவிஸ். அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

மிர்ச்சி சிவா, பிரகாஷ் ராஜ், இஷா தல்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். பத்ரி இயக்கி வருகிறார்.

ரஜினி வேடத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், மாதவி வேடத்தில் இஷா தல்வார், செளகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா என்று அனைவரும் எந்த வேடத்தில் நடிக்கிறார்கள் என்று உறுதி செய்தார்கள்.

தற்போது நாகேஷ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. 'தில்லு முல்லு' படத்தில் ரஜினியை மீசையோடு ஒரு வேடம், மீசையில்லாமல் ஒரு வேடம் என்று நடிக்க சொல்வார் நாகேஷ். அவருடைய தூண்டுதலின் பேரிலேயே ரஜினி இரு வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார்.

நாகேஷ் நடித்த முக்கிய வேடத்தில் பவர் ஸ்டார் நடிக்க இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாடகர் ஆகிறார் நம்ம பவர் ஸ்டார்

ஷங்கர் படத்தில் நடிப்பதோடு, பாடகர் ஆகிறார் நம்ம பவர் ஸ்டார்



ஒரு காலத்தில் நக்கல் நையாண்டிப் பொருளாகப் பார்க்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், இன்று நிஜமாகவே 'பவர்' கூடி வருகிறார்.

ஷங்கர் படம், பாலா படம், சந்தானத்துடன் ஒரு படம் என ஏகப்பட்ட வாய்ப்புகள், கூடவே சொந்தமாக ஏழெட்டு பட தயாரிப்புகள் என உடம்பெல்லாம் மச்சம் கொண்ட அதிர்ஷ்ட பார்ட்டியாகிவிட்டார்.

இப்போது பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் சீனிவாசன்.

அவரது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக அவரே சொந்தக் குரலில் பாடியுள்ளாராம். இந்தப் பாடலை விரைவில் யு ட்யூபில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலிருக்கிறார் சீனிவாசன்.

இன்றைய சூழலில் பல முக்கிய படங்கள் யு ட்யூபை விளம்பர சாதனமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. எனவே தானும் அந்த யுத்தியைக் கையாளுவதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

யு ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைத் தளங்களில் சீனிவாசனுக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.