எச்சரிக்கை

" கொல கொலயா முந்திரிக்கா பவர் ஸ்டார் ர தொட்டா நீ கத்திரிக்கா "

திங்கள், 10 டிசம்பர், 2012

நான் பவர் ஸ்டார் ரசிகன் ; இயக்குநர் ஷங்கர்


நடிகர் சந்தானம் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை இயக்குனர் ராமநாராயணனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது.
சாதாரண நிகழ்ச்சியாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பவர் ஸ்டார் மற்றும் அவரது ரசிகர்களின் கைதட்டல், விசில் சத்தத்தால் களைகட்டியது. பவர் ஸ்டாரின் பேரை யார் உச்சரித்தாலும் திரையரங்கில் ஒரே விசில் சத்தமும், கைதட்டலுமாக இருந்தது. அந்தளவுக்கு கூட்டம் அலைமோதியது.
இவ்விழாவில் பவர் ஸ்டார் பேசும்போது, ’’அனைவருக்கும் இந்த லட்டு ஒரு திகட்டாத லட்டாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம்.
திரையுலகில் நான் மீண்டும் முத்திரை குத்த வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். தயாரிப்பாளர் ராமநாரயாணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி நடிக்க வாய்ப்பளித்த அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ’ படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நான் சற்று யோசித்தேன், இது கனவா? நனவா? என்று. அழைப்பு வந்ததின் பேரில் நான் அங்கு சென்றபோது எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
நான் அவரிடம் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், “அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்“ என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.
அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள். அதற்குமேல் எனக்கு உயிரினும் மேலான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்’’என்று கூறினார்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பவர் ஸ்ராரின் ஜெயில் அனுபவங்கள்...அடுத்து முதல்வர் பதவி?(power star )

'பவர் ஸ்டாரை சினிமாவில பார்த்திருப்பீங்க, ஃபங்ஷன்ல பார்த்திருப்பீங்க, 'நீயா நானா’வில கோபிநாத் கொஸ்டீன் கொக்கிபோட்டுப் பார்த்திருப்பீங்க, பவர் ஸ்டாரை ஜெயிலிலே பார்த்திருப் பீங்களா?’ என்று நாமாகவே ஒரு பஞ்சர் பஞ்ச் சொல்லும் படி ஜெயிலுக்குப் போய் வந்திருக்கிறார் பவர் ஸ்டார். எடுத்த எடுப்பிலேயே,
ஜெயிலுக்குப் போய் வந்தவர் கள் எல்லாம் என்ன சொல்வார் களோ, அதே வார்த்தைகளோடு ஆரம்பித்தார் சீனிவாசன்.
''கோர்ட்ல கேஸ் நடந்து கிட்டிருக்கு. அதனால அதைப் பத்தி ரொம்பப் பேச முடியாது. ஆனா, ஒரு விஷயம்... யாரோ என் வளர்ச்சி பொறுக்காம சதி பண்றாங்க. அது சினிமாக்காரங்களா, கூட இருக்குறவங் களானு தெரியலை... எந்த சதியா இருந்தாலும் சட்டத்துக்கு முன்னாடி நான் ஒரு அப்பாவினு நிரூபிப்பேன்!''
'ஆமா, ஜெயில் அனுபவம் எப்படி இருந்தது?''
'2,000 பேர் உள்ள இருந்தாங்க. என்னைப் பார்த்ததும் 'பவர் ஸ்டார், பவர் ஸ்டார்’னு உற்சாகம் ஆயிட் டாங்க. நானும் உற்சாகம் ஆயிட்டேன். ஆனா ஒண்ணுங்க, என்னோட படத் துக்கு ஜெயில் சீன் எப்படி வைக்கணும்கிறதைக் கத்துக்கிட்டேன்!''
''ஜெயிலுக்கு எல்லாம் போய்ட்டு வந்துட்டீங்க, அப்போ அடுத்து அரசியல்தானே?''
'எனக்கு அந்த மாதிரி ஆசை எல்லாம் இல்லை. இறைவனுடைய அமைப்பு நான் முதல்வர் ஆகணும்னு இருந்ததுனா, ஆக வேண்டியதுதான். ஆனா, எனக்கு சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகணும்னுதான் ஆசை!''
' 'கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்துல நடிக்கிறீங்களா, இல்லை, தூக்கிட்டாங்களா?''
''அட, நீங்க வேற. 'அது வேற இது வேற’னு சொல்லிட்டாங்க. சந்தானம் கூப்பிட்டுப் பேசினாரு. 'ஒண்ணும் பிரச்னை இல்லைண்ணா.  அடுத்த மாசம் வாங்கண்ணா’னு சொன்னாரு. அந்தப் படத்துல மூணு ஹீரோவில நான் ஒரு ஹீரோ!''
''அப்போ ஷங்கரோட 'ஐ’ படத்திலயாவது உங்களைத் தூக்கிட் டாங்களா, இல்லையா?''
''நீங்க ஏங்க அதிலேயே குறியா இருக்கீங்க? 'ஐ’ படத்துக்கு நான் ஷூட்டிங் முடிச்சே கொடுத்துட்டேன். ஷங்கர் நல்லா எனக்கு கோ ஆபரேட் பண்ணினாரு. 'நானும் உங்க ஃபேன்தான்’னு சொல்லி என்னோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டார் ஷங்கர்!''
'சினிமாவில உங்களுக்குப் போட்டி யாரு?'
''வேற யாரு, சூப்பர் ஸ்டார்தான்!''
''அவரை நேர்ல பார்த்திருக்கீங் களா?''
''பார்த்திருக்கேன். ஆனா, பேசுற வாய்ப்பு கிடைக்கலை. ஆனா, கமலை மட்டும் பார்த்துப் பேசி போட்டோ எடுத்துகிட்டேன்.  ஒரு ஃபங்ஷன்ல என் ரசிகர் எல்லாம் அவர் முன்னாடி ஆரவாரம் பண்ணினப்ப அவருக்கு ஒரே சந்தோஷம்!''
''பவர் ஸ்டாருக்கு ஏத்த ஜோடி யாரு?''
''ஐஸ்வர்யா ராய்தான்!''
''ஏங்க, அவங்களுக்குக் குழந்தை எல்லாம் பிறந்துடுச்சுங்க...''
'அதனால என்னங்க? சினிமாவிலதாங்க ஜோடி சேரப் போறேன். ஒரு தடவையாவது அவங்களோட நடிச்சிடணும். ஆனா ஒண்ணு அவங்க, கதைக்குத் தகுந்த கதாநாயகியாக இருக்கணும். இல்லைனா ஐஸ்வர்யா ராய்னாலும் நோதான்!'.
''பவர் ஸ்டார்ங்கிற முறையில பவர் கட்டைப் பத்தி என்ன நினைக் கிறீங்க?''
'நாம மின்சாரத் தேவை அளவுக்கு இன்னும் மின்சாரம் உற்பத்தி ஆகலைனுதான் நினைக்கறேன். ஆனா, அம்மா பிரமாதமா ஆட்சி பண்ணிட்டு இருக்காங்க. அதனால எல்லாத்துக்கும் சீக்கிரம் கரன்ட் கொடுத்துடுவாங்கனு நம்பறேன்!''
''உங்க தொல்லை ஃபேஸ்புக், ட்விட்டர்லயும் தாங்கலையே...?''
'இதுல ஆச்சர்யம் என்னன்னா நான் எதுலயுமே இல்ல. என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லித்தான் எனக்கே தெரியும். காலேஜ் பசங்க நிறைய பேர் என்னோட ஃபேன்ஸ். அவங்க என்மேல வெச்சிருக்கிற பாசத்துல அவங்களாவே அக்கவுன்ட் ஆரம்பிச்சிட்டாங்க!''
'ஓப்பனா சொல்லுங்க, நீங்க வில்லனா... இல்லே காமெடி பீஸா?'
''ஒரே வார்த்தையில சொல் லணும்னா....நான் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன் சார்!''

வியாழன், 13 செப்டம்பர், 2012

பவர் ஸ்டார் நடிக்கும் படத்தில் கெளரவ வேடத்தில் சிம்பு.


சந்தானம், பவர் ஸ்டார் இணைந்து 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தானம் , ராம நாராயணன் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகிறார்கள்.

இப்படம் தொடங்கும் போது,  "முன்னணி மூன்றெழுத்து நடிகர் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்" என்று தெரிவித்து இருந்தார்கள்.

சிம்பு தான் அந்த மூன்றெழுத்து நடிகர் என்று தெரியவந்துள்ளது.

சந்தானத்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சிம்பு.  தற்போது சந்தானம் தயாரிப்பாளராக அறிமுகமாவதால் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக சிம்பு நடிக்கும் காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

புதன், 12 செப்டம்பர், 2012

ரஜினி படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் பவர் ஸ்டார்...



ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தின் ரீமேக்கை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது வேந்தர் மூவிஸ். அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

மிர்ச்சி சிவா, பிரகாஷ் ராஜ், இஷா தல்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். பத்ரி இயக்கி வருகிறார்.

ரஜினி வேடத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், மாதவி வேடத்தில் இஷா தல்வார், செளகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா என்று அனைவரும் எந்த வேடத்தில் நடிக்கிறார்கள் என்று உறுதி செய்தார்கள்.

தற்போது நாகேஷ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. 'தில்லு முல்லு' படத்தில் ரஜினியை மீசையோடு ஒரு வேடம், மீசையில்லாமல் ஒரு வேடம் என்று நடிக்க சொல்வார் நாகேஷ். அவருடைய தூண்டுதலின் பேரிலேயே ரஜினி இரு வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார்.

நாகேஷ் நடித்த முக்கிய வேடத்தில் பவர் ஸ்டார் நடிக்க இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாடகர் ஆகிறார் நம்ம பவர் ஸ்டார்

ஷங்கர் படத்தில் நடிப்பதோடு, பாடகர் ஆகிறார் நம்ம பவர் ஸ்டார்



ஒரு காலத்தில் நக்கல் நையாண்டிப் பொருளாகப் பார்க்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், இன்று நிஜமாகவே 'பவர்' கூடி வருகிறார்.

ஷங்கர் படம், பாலா படம், சந்தானத்துடன் ஒரு படம் என ஏகப்பட்ட வாய்ப்புகள், கூடவே சொந்தமாக ஏழெட்டு பட தயாரிப்புகள் என உடம்பெல்லாம் மச்சம் கொண்ட அதிர்ஷ்ட பார்ட்டியாகிவிட்டார்.

இப்போது பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் சீனிவாசன்.

அவரது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக அவரே சொந்தக் குரலில் பாடியுள்ளாராம். இந்தப் பாடலை விரைவில் யு ட்யூபில் ரிலீஸ் செய்யும் திட்டத்திலிருக்கிறார் சீனிவாசன்.

இன்றைய சூழலில் பல முக்கிய படங்கள் யு ட்யூபை விளம்பர சாதனமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. எனவே தானும் அந்த யுத்தியைக் கையாளுவதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

யு ட்யூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைத் தளங்களில் சீனிவாசனுக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

Kanna Laddu Thinna Aasaiya

               Kanna Laddu Thinna Aasaiya

Santhanam is playing the lead role besides producing Kanna Laddu Thinna Aasaiya (KLTA) for his newly floated production house Hand Made Films in association with Sri Thenandal Films of Ramanarayanan.
It went to floors recently.
The highlight of this hilarious entertainer, directed by Manikandan, is that Power Star Dr Srinivasan is part pof the project. Music is by S Thaman. Cinematography will be handled by Balasubramanian.
Santhanam will play the lead role while Visaka is cast as his heroine. Sethu, VTV Ganesh, Mayilsamy and Kovai Sarala among others play prominent role in the film.


Powerstar Rasigargal


வெள்ளி, 29 ஜூன், 2012

எனக்குப் போட்டியாளர் சூப்பர் ஸ்டார் ஒருவரே – பவர் ஸ்டார்



கடந்த சனிக்கிழமையன்று சேலத்தில் நடைபெற்ற ‘மெகா டிவி – அரசன் சோப்’ இணைந்து வழங்கிய லஷ்மண் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார் ‘பவர் ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன்.
அவரைக் காண்பதற்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் எழுப்பிய கேள்விகள் சிலவற்றுக்கு மேடையிலேயே அதிரடி பதில் தந்து அசத்தினார் பவர் ஸ்டார்.
  •  உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?
    உழைப்பால் உயர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மட்டுமே எனக்குப் போட்டியாளர். வேறு யாருமே இல்லை
  • உங்களுக்குப் பிடித்த நடிகை?
    உலக அழகி ஐஸ்வர்யா ராய்
  • ஒரு படத்திலே ஒன்பதாம் வகுப்பு மாணவனா நடிக்கிறீங்களாமே?
    ஆமாம். கதைப்படி அந்த வேடம் எனக்கு மிகவும் பொருந்தியது. அதான்.
  • உங்கள் எதிர்ப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
    கொல கொலயா முந்திரிக்கா. பவர்ஸ்டாரைத் தொட்டா கத்திரிக்கா
  • டைட்டானிக் படத்தை தமிழிலே எடுத்து அதிலே ஹீரோவா நடிக்கப் போறீங்களாமே?
    அப்படி ஒரு திட்டம் இருக்குது. நமக்குப் புடிச்ச படம் அது.
  • நீங்க நிறைய பேருக்கு வெளியே தெரியாம உதவுறீங்களாமே?
    சமீபத்திலே மதுரையிலே ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மையத்திலேர்ந்து ஒருத்தரு வந்தாரு. “உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்யா?”ன்னு கேட்டேன். “அதெல்லாம் வேண்டாம். எங்ககிட்ட ஒரு அறுபது பசங்க இருக்காங்க. அவங்க யாருமே மெட்ராஸ் பாத்ததேயில்லை.அவங்க மெட்ராஸை சுத்திப் பார்க்க நீங்க தான் உதவணும்” அப்படீன்னு கேட்டாரு. உடனே அவங்க எல்லாருக்கும் ஏ.சி. ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்து மெட்ராஸிலே வந்து தங்க வெச்சு மூணு நாள் சுத்திக் காமிக்க வெச்சேன். அத்தனை பேருக்கும் ரொம்ப சந்தோஷம். எனக்கும் ரொம்ப சந்தோஷம். இதே மாதிரி என்னோட பல லட்சக்கணக்கான ரசிகர்களும் என் கூட சேர்ந்தாங்கன்னா நாம நிறைய நல்ல விஷயங்கள் செய்யலாம்.

ஞாயிறு, 17 ஜூன், 2012

திட்டியதால் திரும்பிய பவர்ஸ்டார்

திட்டியதால் திரும்பிய பவர்ஸ்டார் சீனிவாசன்?


பரதேசி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு இயக்குநர் பாலா அழைப்பு விடுத்தார். இதனால் உற்சாகம் அடைந்த அவர், தனது கேங்குடன் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதைப்பார்த்த பாலா, அவரை மறைமுகமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து திரும்பிய சீனிவாசன், இனி பரதேசி படத்தில் நடிப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது. 


செவ்வாய், 12 ஜூன், 2012

முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்





முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்


  விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.

கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும் நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..

எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல் அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?

இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?
அலப்பறை மன்னன் அண்ணன் கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்

1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும் நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க


பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?
டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என்ன ?..

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால்
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?

250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?..

 ..
ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா? மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை... சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...

வாழ்ந்தா கெத்தா வாழனும் இல்லாட்டி செத்து போகணும்

பால்டாயில் குடிச்சு பொழச்சவன் கூட உண்டு பவர பகைச்சு பொழச்சவன் இல்ல

ஞாயிறு, 10 ஜூன், 2012

வெள்ளி, 8 ஜூன், 2012

யார் இந்த பவர் ஸ்டார் உலக ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்

 யார் இந்த பவர் ஸ்டார்  உலக ரசிகர்கள் என்ன  சொல்கிறார்கள் 

click this link

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vEMFR4-ndeg

எங்க பவர் ஸ்டாருக்கு போட்டி இந்த உலகத்துல யாரும் இல்லடா...

யாருடா எங்க பவர் ஸ்டார் கமலுக்கு போட்டின்னு சொன்னது??????இப்போ வாங்கடா....எங்க பவர் ஸ்டாருக்கு போட்டி இந்த உலகத்துல யாரும் இல்லடா.....கமலுக்கே எங்க பவர் ஸ்டார் தான் இன்ஸ்பிரேரேஷன்

பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்களின் லத்திகா மருத்துவமனை திறப்பு விழா படங்கள்

Dr.Srinivasan Lathika Hospital Launch Stills

Tamil Actor and Producer Dr. Srinivasan bulided new Lathika Hospital in Thirumangalam, Anna Nagar West Chennai. K.R.Vijaya, Chennai Mayor M.Subramaniam, Vani Viswanath, Devayani, Brindha, Singamuthu graced the event.





பிரபஞ்ச நாயகன் பவர் ஸ்டார் ன் பவர் புல் வீடியோஸ்

ஞாயிறு, 3 ஜூன், 2012

பவர் ஸ்டாரின் திரைப்படங்கள்

    அதிவிரைவில் உங்களை மகிழ்விக்க வரும் பவர் ஸ்டாரின் திரைப்படங்கள் 

    அனந்த  தொல்லை
    தேசிய  நெடுஞ்சாலை
    இந்திரா சேனா
    கருங்காலி
    லத்திக
    மன்னவன்
    மூலக்கடை முருகன்
    நானே வருவேன்  - 2010
    ப . ர . பழனிச்சாமி
    பூங்கொடி ஜன்னலில்
    சுரங்க பதை
    திருமா (A) திருமநிச்கம் ...
    உனக்காக ஒரு கவிதை








  தன்னம்பிக்கைக்கு  கிடைத்த தரமான் வெற்றி  லத்திகா




பவர் ஸ்டார் போட்டோ காலரி