எச்சரிக்கை

" கொல கொலயா முந்திரிக்கா பவர் ஸ்டார் ர தொட்டா நீ கத்திரிக்கா "

புதன், 3 ஏப்ரல், 2013

பவர் ஸ்டாருனா சும்மா அதிரனும்ல...





பவர்ஸ்டார் ஒரு முறை மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள அலுவலக‌ம் ஒ‌ன்‌றி‌ல் அலுவலக பணியாளராக (‌பியூ‌ன்) ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர்.அவ‌ரிட‌ம் ஒரு கெ‌ட்ட பழ‌க்க‌ம் இரு‌ந்தது. அதாவது யாராவது, ஒருவரை‌ப் ப‌ற்‌றி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல், நடு‌‌வி‌ல் புகு‌ந்து, ஓ... அவரா? அவரை என‌க்கு தெ‌ரியுமே எ‌ன்று கூறுவா‌ர்.

ஒரு முறை அ‌ந்த அலுவலக‌த்‌தி‌ன் மேல‌திகா‌ரி (அமெ‌ரி‌க்கா‌வில் ‌பிற‌ந்து வள‌ர்‌ந்தவ‌ர்) ஆ‌‌ர்னா‌ல்‌ட் ப‌ற்‌றி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர். உடனே எ‌ப்போது‌ம் போல நமது பவர்ஸ்டார், ஓ ஆ‌ர்னா‌ல்‌டா அவ‌ர் எ‌ன்னோட ந‌ண்பரா‌ச்சே எ‌ன்று கூ‌றினா‌ர்.இதை‌க் கே‌ட்ட முதலா‌ளி‌க்கு‌‌ சி‌ரி‌ப்பு வ‌ந்து‌வி‌ட்டது. எ‌ன்ன ஆ‌‌ர்னா‌ல்டை உன‌க்கு‌த் தெ‌ரியுமா? ச‌ரி அடு‌த்த முறை நா‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ப் போகு‌ம்போது உ‌ன்னையு‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்‌கிறேன். உன‌க்கு ஆ‌ர்னா‌ல்டை தெ‌ரியுமா இ‌ல்லையா எ‌ன்பைத அ‌ப்போது பா‌ர்‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ர்.அத‌ற்கு பவர்ஸ்டாரும் ஒ‌‌ப்பு‌க் கொ‌ண்டு தலையசை‌த்தா‌ர்.

முதலா‌ளி சொ‌ன்னபடியே பவர்ஸ்டாரை அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு அழை‌த்து‌ப் போனா‌‌ர். ‌பிறகு ஆ‌ர்னா‌ல்டி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு‌ அழை‌த்து‌ச் செ‌ன்றா‌ர். ஆ‌ர்னா‌ல்‌ட் பவர்ஸ்டாரை பா‌ர்‌த்தது‌ம் ஓடி வ‌ந்து "ஹா‌ய் பவர்... எ‌வ்வளவு நாளா‌ச்சுடா உ‌ன்ன பா‌ர்‌த்து... எ‌ங்கடா போன இ‌வ்வளவு நாளா" எ‌ன்று கே‌ட்டவாறு அவரை உ‌ள்ளே அழை‌த்து‌ச் செ‌ன்று தே‌னீ‌ர் ‌விரு‌ந்து அ‌ளி‌த்தா‌ர்.அதுவரை வாச‌லி‌ல் ‌நி‌ன்‌றிரு‌ந்தா‌ர் அ‌தி‌ர்‌ச்‌சியடை‌ந்த முதலா‌ளி. ‌பி‌ன்ன‌ர் பவர்ஸ்டார் வ‌ந்தது‌ம், ‌

ஒபாமா ‌வீ‌ட்டி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌‌ன்றா‌ர். ‌ஒபாமாவும் ஆ‌ர்னா‌ல்டை‌ப் போலவே பவர்ஸ்டாரை க‌ட்டி அணை‌த்து‌க் கொ‌ண்டு, "ஒரு கா‌பியாவது குடி‌‌த்து‌வி‌ட்டு‌ப் போ" என வ‌ற்புறு‌த்‌தினா‌ர்.இதை‌ப் பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல் உறை‌ந்தே போனா‌‌ர் முதலா‌ளி.

கடை‌சியாக வாடிகனு‌க்கு பவர்ஸ்டாரை அழை‌த்து‌ப் போனா‌‌ர் முதலா‌ளி. அ‌ங்கு ம‌க்க‌ள் கூ‌ட்ட‌ம் அலை மோ‌தியது. அ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ளே நுழைவது ‌மிக‌க் கடினமான ‌விஷயமாக இரு‌ந்தது. எனவே பவர்ஸ்டார்
தனது முதலா‌ளி‌யிட‌ம் "கொ‌ஞ்‌ச‌ம் இ‌ங்கேயே இரு‌ங்க‌ள். நா‌ன் போ‌ய் வரு‌கிறே‌ன்" எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டு‌ச் செ‌ன்றா‌‌ர்.‌
சி‌றிது நேர‌த்‌தி‌ல் வாடிக‌ன் மா‌ளிகை‌யி‌ன் பா‌ல்க‌னி‌யி‌ல் இரு‌ந்து போ‌ப்‌பி‌ன் கைகளை ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டு பவர்ஸ்டார் தோ‌ன்‌றினா‌ன்.‌அ‌வ்வளவுதா‌ன் வாச‌லி‌ல் ‌நி‌ன்று இதனை‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த முதலா‌ளி மய‌ங்‌கி ‌விழு‌ந்தா‌ர். அவரை உடனடியாக மரு‌‌த்துவமனை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ன்று ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்த ‌பி‌ன் பவர்ஸ்டார், எ‌ன்ன ஆ‌னது உ‌ங்களு‌க்கு? எ‌ன்று கே‌ட்டா‌ர்.

அத‌ற்கு முதலா‌ளி, "ஆ‌ர்னா‌ல்டை உன‌க்கு‌த் தெ‌ரியு‌ம், ‌ஒபாமாவுக்கு‌ம் உ‌ன்னை‌த் தெ‌ரியு‌ம், போ‌ப்புட‌னு‌ம் உன‌க்கு பழ‌க்க‌ம் இரு‌க்‌கிறது. இதெ‌ல்லா‌ம் பெ‌ரிய ‌விஷயமே இ‌ல்லை. ஆனா‌ல்........
‌நீ போ‌ப்புட‌ன் பா‌ல்க‌னி‌யி‌ல் தோ‌ன்‌றியது‌ம் அ‌ங்கு கூடி‌யிரு‌ந்த கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் இரு‌ந்த ஒருவ‌ன், எ‌ன்‌னிட‌ம்... யாருடா அது பா‌ல்க‌னி‌யி‌ல் பவர்ஸ்டார் கையை‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பது ‌எ‌ன்று கே‌ட்டா‌ன். அதை‌த் தா‌ன் எ‌ன்னா‌ல் தா‌ங்‌கி‌க் கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை" எ‌ன்று கூ‌றி ‌‌வி‌ட்டு ‌மீ‌ண்டு‌ம் மய‌க்கமானா‌ர்.

#பவர் ஸ்டாருனா சும்மா அதிரனும்ல...

வெள்ளி, 8 மார்ச், 2013

அழகன் அழகி ஷூட்டிங் ஸ்பாட் - பவர் ஸ்டார் ரின் கலக்கல் ஸ்டில்ஸ்

அழகன்  அழகி  ஷூட்டிங் ஸ்பாட்  - பவர் ஸ்டார் ரின்  கலக்கல் ஸ்டில்ஸ்







ஒன்பதுல குரு படபிடிப்பு பவர் ஸ்டார்ரின் பவர் புல் ஆக்டிங்







“கூகுள், யஹூ ஓனர்கள் பவர் ஸ்டார் சீனிவாசன் ரசிகர்களா?”







தமிழ் சினிமா இணையதளங்களிலும், சமூக இணையதளங்களிலும் அதிகம் அடிபடும் பெயர் பவர் ஸ்டார் சீனிவாசனின் பெயர் என்ற நிலை மாறி, அகில இந்திய அளவிலும் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது நம்மாளுக்கு.
அதனால், கொந்தளிக்கிறார்கள் ஆந்திரா ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில், சூப்புர் ஸ்டார் என்றால் ஒரேயொரு ரஜினி, இளைய தளபதி என்றால் ஒரேயொரு விஜய் என்று அவரவர் பட்டப் பெயர்களில் அறியப்பட்டு இருப்பதுபோல, ஆந்திராவில் பவன் கல்யானோட பட்டப் பெயர் பவர் ஸ்டார்! அவரது பட போஸ்டர்கள் எல்லாவற்றிலும், பவர் ஸ்டார் பவன் கல்யான் என்றே போடப்படுகிறது.
இப்போதெல்லாம் கூகுள், யாஹு போன்ற சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் ‘பவர் ஸ்டார்’ என்று தெலுங்கு சினிமா ரசிகர்கள் டைப் செய்தால், எடுப்பான பற்களுடன் சிரித்தபடி ஒரு மூஞ்சிதான் வந்து நிற்குதாம்!
“யாருங்க இது பல்லை காட்டிட்டு நிற்கிறது?  கல்யாணராமன் கமல் போல நம்ம பவன் கல்யானின் புது படத்துக்கு, புது கெட்டப்போ” என்று தெலுங்கு ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு மேலதிக விபரங்களை தேடியதில், தமிழில் ஒரு பவர் ஸ்டார் உலா வரும் விஷயம் அவர்களுக்கு தெரிந்தது.
அதுவும் சாதாரண உலா அல்ல… இணைய உலா! அதில்தான் தொடங்கியது ஆந்திராக்காரர்களுக்கு சிக்கல்.
பவன் கல்யான் ரசிகர்கள் அதுபற்றி புகார் கொடுத்ததை அடுத்து, அவரது ரசிகர்மன்ற தலைமையகத்தில் கூடி, ஒரு டெஸ்ட் செய்து பார்த்தார்களாம்.
சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் ‘பவர் ஸ்டார்’ என்று டைப் செய்தால், முதல் 4 பக்கங்களுக்கு நம்ம பவர் ஸ்டாரின் விதவித போஸ்கள் வந்து 5-வது பக்கத்துக்கு பிறகுதான், போனால் போகிறதென்று பவன் கல்யான் பற்றி வருகிறதாம்!
இதனால், கடந்த சில தினங்களுக்கு முன் நம்ம ‘பவர் சீனியோட’ கொடும்பாவியை எரிச்சு எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க பவன் கல்யானோட ரசிகர்கள்.
அது மட்டுமல்ல, “நம்ம ரியல் ஹரோவும், அவங்க (ஹி..ஹி.. தமிழர்கள்) காமெடியனும் ஒண்ணா? இனிமேல் அப்படி வராதது மாதிரி உங்க சர்ச் இன்ஜினை மாற்றி அமைச்சுக் கொடுங்க” என்று இவ்விரு இணைய தளங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் இமெயில் அனுப்பியிருக்கிறார்களாம்.
ஆனால், இணையதளத்தில் அதிக எண்ணிக்கையானவர்கள் எந்த பவர் ஸ்டாரை கிளிக் செய்கிறார்களோ, அந்த பவர் ஸ்டாரின் பெயர் முதலில் வருவதாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளன, கூகுள், மற்றும் யாஹூ சர்ச் இஞ்சின்கள். அந்த விதத்தில் அதிகம் கிளிக் செய்யப்படுவது, நம்ம சீனியோட போட்டோக்கள்தான்!
தன் கொடும்பாவி எரிக்கப்பட்டதை கேள்விப்பட்ட நம்ம ஊரு பவர், “ஆஹா அற்புதம்… எட்றா ஒரு டிக்கெட்டு ஆந்திராவுக்கு. அங்கேயும் கலக்கணும்” என்று சொல்லி வருகிறாராம்.
இரு மாநிலங்களுக்கும் இடையே நிலைமை இன்னமும் கன்ட்ரோலில்தான் இருக்கிறது. எப்போது அவுட்-ஆஃப்-கன்ட்ரோல் ஆகும் என்றால், ‘லத்திகா’ படத்தை தெலுங்கில் டப் செய்து, ஆந்திராவில் ரிலீஸ் செய்யும்போதுதான்!
அப்போது ஓடும் ரத்த ஆறு!

ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?

பவர்ஸ்டார் என்று டாக்டர் சீனிவாசன் பட்டப் பெயர் வைத்தாலும் வைத்தார் அது கொடும்பாவி எரிப்பு வரை வந்திருக்கிறது. தங்களது தலைவருக்குக் கடும் போட்டியாக சீனி கிளம்பியிருப்பதைக் கண்டு கொதிப்படைந்த ஆந்திர பவர்ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள் நம்ம ஊர் பவர் ஸ்டாரின் கொடும்பாவியைக் கொளுத்தி விளையாடியுள்ளனராம். 
கூகுள், யாஹூ என தேடுபொறியில் பவர்ஸ்டார் என்று போட்டாலே அங்கு நம்ம சீனிவாசன் வருவதுதான் அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு காரணம். ஆந்திராவில் பவன் கல்யாண் பட்டப் பெயர் பவர் ஸ்டார்! அவரது பட போஸ்டர்கள் எல்லாவற்றிலும், பவர் ஸ்டார் பவன் கல்யான் என்றே போடப்படுகிறது. ஆனால், கூகுள், யாஹூ போய் ஆசை ஆசையாய் தெலுங்கு ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று டைப் செய்தால் எடுப்பான பற்களுடன் சிரித்தபடி ஒரு மூஞ்சிதான் வந்து நிற்குதாம்! கல்யாணராமன் கமல் போல நம்ம பவன் கல்யானின் புது படத்துக்கு, புது கெட்டப்போ என்று தெலுங்கு ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு விபரங்களை தேடியதில், தமிழில் ஒரு பவர் ஸ்டார் உலா வரும் விஷயம் அவர்களுக்கு தெரிந்தது. அப்புறம்தான் ஆவேசப்பட்டுள்ளனர் தெலுங்கு ரசிகர்கள்.
பவன் கல்யாண் தலைமை ரசிகர் மன்றத்தில் ஒன்று கூடிய ரசிகர்கள் சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் மீண்டும் சோதனை செய்து பார்த்துள்ளனர். ‘பவர் ஸ்டார்' என்று டைப் செய்தால், முதல் 4 பக்கங்களுக்கு தமிழ் பவர் ஸ்டாரின் விதவித போஸ்கள் வந்து 5-வது பக்கத்துக்கு பிறகுதான், போனால் போகிறதென்று பவன் கல்யாண் பற்றி வருகிறதாம்!
இதனால், கடந்த சில தினங்களுக்கு பவர் ஸ்டார் சீனிவாசனின் கொடும்பாவியை எரிச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பவன் கல்யாண் ரசிகர்கள்.
ஹீரோவும், காமெடியனும் எப்படி ஒண்ணாக முடியும்? இனிமேல் அப்படி வராதது மாதிரி சர்ச் இன்ஜினை மாற்றி அமைச்சுக் கொடுங்க என்று இவ்விரு இணைய தளங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து பவன் கல்யாணின் லட்சக்கணக்கான ரசிகர்கள் இமெயில் அனுப்பியிருக்கிறார்களாம்.
இணையதளத்தில் அதிக எண்ணிக்கையானவர்கள் எந்த பவர் ஸ்டாரை கிளிக் செய்கிறார்களோ, அந்த பவர் ஸ்டாரின் பெயர் முதலில் வருவதாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளன, கூகுள், மற்றும் யாஹூ சர்ச் இஞ்சின்கள். அந்த வகையில் அதிகம் கிளிக் செய்யப்படுவது, பவர் சீனிவாசனின் போட்டோக்கள்தானாம்.
  பவர் ஸ்டார் சீனிவாசன், தன் கொடும்பாவி எரிக்கப்பட்டதை கேள்விப்பட்டு, "ஆஹா அற்புதம்... எட்றா ஒரு டிக்கெட்டு ஆந்திராவுக்கு. அங்கேயும் கலக்கணும்" என்று சொல்லி வருகிறாராம். ‘லத்திகா' படத்தை தெலுங்கில் டப் செய்து, ஆந்திராவில் ரிலீஸ் செய்யும்போது இரண்டு பவர்ஸ்டாரின் ரசிகர்களும் மோதிக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. சரி விடுங்க, எந்த மண்டை முதலில் உடையுதன்னு பார்ப்போம்...!

புதன், 13 பிப்ரவரி, 2013

பவர் ஸ்டார், ‘பவர்’ காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

  “லட்டு தந்த தம்பி சந்தானம்; லட்டு போல கிடைத்த தம்பி விஜய்” -அண்ணன் பவர் ஸ்டார்!

 நேற்று மாலை சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவி தியேட்டரில் நடைபெற்ற பட ஆடியோ விழாவுக்கு சென்றிருந்த சினிமாக்காரர்கள் யாருமே, அடுத்து ஒரு பங்ஷன் வைத்தால், வருந்தி அழைக்கப் போகும் நபர், சாட்சாத் பவர் ஸ்டார்தான்! அந்தளவுக்கு பவர் ஸ்டார், ‘பவர்’ காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

நடைபெற்றது, ‘ஒன்பதுல குரு’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன். நடிகர் விஜய்யிடம் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பி.ஆர்.ஓ.வாக பணிபுரிந்து வரும் பி.டி.செல்வக்குமார் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்திருக்கும் படம் இது. அந்த வகையில் இளைய தளபதி விஜயம், மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் வந்திருந்தனர்.
பி.டி.செல்வக்குமார் இன்டஸ்ட்ரியில் நன்கு அறியப்பட்டவர் என்ற விதத்தில், கே.எஸ்.ரவிகுமார் (இவரும் இந்த படத்தில் நடிக்கிறார்) கே.பி.ஆனந்த், சமுத்திரக்கனி, லக்ஷ்மிராய், ஓவியா, கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஆர்.பி.சௌத்ரி, என்று ஏகப்பட்ட தலைகள். இவர்கள் எல்லோருடன், ஸ்பெஷல் அட்ராக்ஷனாக, பவர் ஸ்டார்!
பவர் ஸ்டாரின் பவர் அறிந்து, விஜய் பக்கத்திலேயே அமர வைத்திருந்தார்கள் அவரை.மேடையில் ஏகப்பட்ட வி.ஐ.பி.கள் இருந்தாலும், விழா முடியும்வரை ஓயாத கைதட்டல் இருவருக்குதான். ஒருவர், விஜய். மற்றையவர் பவர் ஸ்டார்!முன்பெல்லாம் ஏதாவது விழாவுக்கு பவர் ஸ்டார் சென்றால், ‘ரசிகர்களை’ கூடவே அழைத்துச் செல்வது வழக்கம். அவர்கள் தட்டுவார்கள், கைகளை! இப்போதெல்லாம், நிஜமாகவே ஆட்கள் கை தட்டுகிறார்கள்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா, “அடுத்து ‘பவர் ஸ்டார்’ பேசுவார்” என்று சொன்னவுடன் அதிர வைத்த கைதட்டலும், விசில் சத்தமும், மேடையில் இருந்தவர்களையே கைதட்ட வைத்தது.
சிரித்த முகத்தோடு பேசினார் பவர் ஸ்டார். “இந்த ‘ஒன்பதுல குரு’ படத்தில் நான் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன். இந்த விழாவுக்கு இளையதளபதி விஜய் வந்திருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எல்லோருக்கும் அவர் இளையதளபதி ஆனால் எனக்கு மட்டும் இளைய தம்பி.
லட்டு படத்தின் மூலம் எனக்கு சந்தானம் என்ற அருமைத் தம்பி கிடைத்தது போல, இப்போது தம்பி விஜய்யும் எனக்கு அருமைத் தம்பியாக கிடைத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இதே தியேட்டரில்தான் ஒரு பிரம்மாண்டமான ஆடியோ பங்ஷன் நடந்தது. அந்தப் படம் இப்போது சூப்பர் ஹிட் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ‘லட்டு’ விழாவுக்கு அடுத்தபடியாக, இதே தியேட்டரில், இப்போது இந்த படத்தின் ஆடியோ விழா நடக்கிறது. அந்தப்படம் போலவே இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றி பெரும்.
இந்தப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நீங்கள் டான்ஸ் ஆட வேண்டும் என்று டைரக்டர் பி.டி.செல்வக்குமாரும், பி.ஆர்.ஓ நிகில்குமாரும் என்னை வந்து கேட்டர்கள். நான் டான்ஸ் ஆடலாமா வேண்டாமா என்று யோசித்தேன்.
அப்போதுதான் அந்த பி.ஆர்.ஓ. “இவர் யார் தெரியுமா? இவர்தான் விஜய்யோட பி.ஆர்.ஓ.” என்று சொன்னார். விஜய் என்று சொன்னதும் நான் எந்த கேள்வியும் கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டேன்” என்றார் பவர் ஸ்டார் டபுள் கைதட்டலுடன். முதல் கைதட்டல், விஜய் பெயரை சொன்னதற்கு… அடுத்தது, பவர் பேசி முடித்ததற்கு!