எச்சரிக்கை

" கொல கொலயா முந்திரிக்கா பவர் ஸ்டார் ர தொட்டா நீ கத்திரிக்கா "

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பவர் ஸ்ராரின் ஜெயில் அனுபவங்கள்...அடுத்து முதல்வர் பதவி?(power star )

'பவர் ஸ்டாரை சினிமாவில பார்த்திருப்பீங்க, ஃபங்ஷன்ல பார்த்திருப்பீங்க, 'நீயா நானா’வில கோபிநாத் கொஸ்டீன் கொக்கிபோட்டுப் பார்த்திருப்பீங்க, பவர் ஸ்டாரை ஜெயிலிலே பார்த்திருப் பீங்களா?’ என்று நாமாகவே ஒரு பஞ்சர் பஞ்ச் சொல்லும் படி ஜெயிலுக்குப் போய் வந்திருக்கிறார் பவர் ஸ்டார். எடுத்த எடுப்பிலேயே,
ஜெயிலுக்குப் போய் வந்தவர் கள் எல்லாம் என்ன சொல்வார் களோ, அதே வார்த்தைகளோடு ஆரம்பித்தார் சீனிவாசன்.
''கோர்ட்ல கேஸ் நடந்து கிட்டிருக்கு. அதனால அதைப் பத்தி ரொம்பப் பேச முடியாது. ஆனா, ஒரு விஷயம்... யாரோ என் வளர்ச்சி பொறுக்காம சதி பண்றாங்க. அது சினிமாக்காரங்களா, கூட இருக்குறவங் களானு தெரியலை... எந்த சதியா இருந்தாலும் சட்டத்துக்கு முன்னாடி நான் ஒரு அப்பாவினு நிரூபிப்பேன்!''
'ஆமா, ஜெயில் அனுபவம் எப்படி இருந்தது?''
'2,000 பேர் உள்ள இருந்தாங்க. என்னைப் பார்த்ததும் 'பவர் ஸ்டார், பவர் ஸ்டார்’னு உற்சாகம் ஆயிட் டாங்க. நானும் உற்சாகம் ஆயிட்டேன். ஆனா ஒண்ணுங்க, என்னோட படத் துக்கு ஜெயில் சீன் எப்படி வைக்கணும்கிறதைக் கத்துக்கிட்டேன்!''
''ஜெயிலுக்கு எல்லாம் போய்ட்டு வந்துட்டீங்க, அப்போ அடுத்து அரசியல்தானே?''
'எனக்கு அந்த மாதிரி ஆசை எல்லாம் இல்லை. இறைவனுடைய அமைப்பு நான் முதல்வர் ஆகணும்னு இருந்ததுனா, ஆக வேண்டியதுதான். ஆனா, எனக்கு சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகணும்னுதான் ஆசை!''
' 'கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்துல நடிக்கிறீங்களா, இல்லை, தூக்கிட்டாங்களா?''
''அட, நீங்க வேற. 'அது வேற இது வேற’னு சொல்லிட்டாங்க. சந்தானம் கூப்பிட்டுப் பேசினாரு. 'ஒண்ணும் பிரச்னை இல்லைண்ணா.  அடுத்த மாசம் வாங்கண்ணா’னு சொன்னாரு. அந்தப் படத்துல மூணு ஹீரோவில நான் ஒரு ஹீரோ!''
''அப்போ ஷங்கரோட 'ஐ’ படத்திலயாவது உங்களைத் தூக்கிட் டாங்களா, இல்லையா?''
''நீங்க ஏங்க அதிலேயே குறியா இருக்கீங்க? 'ஐ’ படத்துக்கு நான் ஷூட்டிங் முடிச்சே கொடுத்துட்டேன். ஷங்கர் நல்லா எனக்கு கோ ஆபரேட் பண்ணினாரு. 'நானும் உங்க ஃபேன்தான்’னு சொல்லி என்னோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டார் ஷங்கர்!''
'சினிமாவில உங்களுக்குப் போட்டி யாரு?'
''வேற யாரு, சூப்பர் ஸ்டார்தான்!''
''அவரை நேர்ல பார்த்திருக்கீங் களா?''
''பார்த்திருக்கேன். ஆனா, பேசுற வாய்ப்பு கிடைக்கலை. ஆனா, கமலை மட்டும் பார்த்துப் பேசி போட்டோ எடுத்துகிட்டேன்.  ஒரு ஃபங்ஷன்ல என் ரசிகர் எல்லாம் அவர் முன்னாடி ஆரவாரம் பண்ணினப்ப அவருக்கு ஒரே சந்தோஷம்!''
''பவர் ஸ்டாருக்கு ஏத்த ஜோடி யாரு?''
''ஐஸ்வர்யா ராய்தான்!''
''ஏங்க, அவங்களுக்குக் குழந்தை எல்லாம் பிறந்துடுச்சுங்க...''
'அதனால என்னங்க? சினிமாவிலதாங்க ஜோடி சேரப் போறேன். ஒரு தடவையாவது அவங்களோட நடிச்சிடணும். ஆனா ஒண்ணு அவங்க, கதைக்குத் தகுந்த கதாநாயகியாக இருக்கணும். இல்லைனா ஐஸ்வர்யா ராய்னாலும் நோதான்!'.
''பவர் ஸ்டார்ங்கிற முறையில பவர் கட்டைப் பத்தி என்ன நினைக் கிறீங்க?''
'நாம மின்சாரத் தேவை அளவுக்கு இன்னும் மின்சாரம் உற்பத்தி ஆகலைனுதான் நினைக்கறேன். ஆனா, அம்மா பிரமாதமா ஆட்சி பண்ணிட்டு இருக்காங்க. அதனால எல்லாத்துக்கும் சீக்கிரம் கரன்ட் கொடுத்துடுவாங்கனு நம்பறேன்!''
''உங்க தொல்லை ஃபேஸ்புக், ட்விட்டர்லயும் தாங்கலையே...?''
'இதுல ஆச்சர்யம் என்னன்னா நான் எதுலயுமே இல்ல. என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லித்தான் எனக்கே தெரியும். காலேஜ் பசங்க நிறைய பேர் என்னோட ஃபேன்ஸ். அவங்க என்மேல வெச்சிருக்கிற பாசத்துல அவங்களாவே அக்கவுன்ட் ஆரம்பிச்சிட்டாங்க!''
'ஓப்பனா சொல்லுங்க, நீங்க வில்லனா... இல்லே காமெடி பீஸா?'
''ஒரே வார்த்தையில சொல் லணும்னா....நான் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன் சார்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக