எச்சரிக்கை

" கொல கொலயா முந்திரிக்கா பவர் ஸ்டார் ர தொட்டா நீ கத்திரிக்கா "

புதன், 13 பிப்ரவரி, 2013

பவர் ஸ்டார், ‘பவர்’ காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

  “லட்டு தந்த தம்பி சந்தானம்; லட்டு போல கிடைத்த தம்பி விஜய்” -அண்ணன் பவர் ஸ்டார்!

 நேற்று மாலை சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவி தியேட்டரில் நடைபெற்ற பட ஆடியோ விழாவுக்கு சென்றிருந்த சினிமாக்காரர்கள் யாருமே, அடுத்து ஒரு பங்ஷன் வைத்தால், வருந்தி அழைக்கப் போகும் நபர், சாட்சாத் பவர் ஸ்டார்தான்! அந்தளவுக்கு பவர் ஸ்டார், ‘பவர்’ காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

நடைபெற்றது, ‘ஒன்பதுல குரு’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன். நடிகர் விஜய்யிடம் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பி.ஆர்.ஓ.வாக பணிபுரிந்து வரும் பி.டி.செல்வக்குமார் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்திருக்கும் படம் இது. அந்த வகையில் இளைய தளபதி விஜயம், மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் வந்திருந்தனர்.
பி.டி.செல்வக்குமார் இன்டஸ்ட்ரியில் நன்கு அறியப்பட்டவர் என்ற விதத்தில், கே.எஸ்.ரவிகுமார் (இவரும் இந்த படத்தில் நடிக்கிறார்) கே.பி.ஆனந்த், சமுத்திரக்கனி, லக்ஷ்மிராய், ஓவியா, கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஆர்.பி.சௌத்ரி, என்று ஏகப்பட்ட தலைகள். இவர்கள் எல்லோருடன், ஸ்பெஷல் அட்ராக்ஷனாக, பவர் ஸ்டார்!
பவர் ஸ்டாரின் பவர் அறிந்து, விஜய் பக்கத்திலேயே அமர வைத்திருந்தார்கள் அவரை.மேடையில் ஏகப்பட்ட வி.ஐ.பி.கள் இருந்தாலும், விழா முடியும்வரை ஓயாத கைதட்டல் இருவருக்குதான். ஒருவர், விஜய். மற்றையவர் பவர் ஸ்டார்!முன்பெல்லாம் ஏதாவது விழாவுக்கு பவர் ஸ்டார் சென்றால், ‘ரசிகர்களை’ கூடவே அழைத்துச் செல்வது வழக்கம். அவர்கள் தட்டுவார்கள், கைகளை! இப்போதெல்லாம், நிஜமாகவே ஆட்கள் கை தட்டுகிறார்கள்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா, “அடுத்து ‘பவர் ஸ்டார்’ பேசுவார்” என்று சொன்னவுடன் அதிர வைத்த கைதட்டலும், விசில் சத்தமும், மேடையில் இருந்தவர்களையே கைதட்ட வைத்தது.
சிரித்த முகத்தோடு பேசினார் பவர் ஸ்டார். “இந்த ‘ஒன்பதுல குரு’ படத்தில் நான் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன். இந்த விழாவுக்கு இளையதளபதி விஜய் வந்திருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எல்லோருக்கும் அவர் இளையதளபதி ஆனால் எனக்கு மட்டும் இளைய தம்பி.
லட்டு படத்தின் மூலம் எனக்கு சந்தானம் என்ற அருமைத் தம்பி கிடைத்தது போல, இப்போது தம்பி விஜய்யும் எனக்கு அருமைத் தம்பியாக கிடைத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இதே தியேட்டரில்தான் ஒரு பிரம்மாண்டமான ஆடியோ பங்ஷன் நடந்தது. அந்தப் படம் இப்போது சூப்பர் ஹிட் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ‘லட்டு’ விழாவுக்கு அடுத்தபடியாக, இதே தியேட்டரில், இப்போது இந்த படத்தின் ஆடியோ விழா நடக்கிறது. அந்தப்படம் போலவே இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றி பெரும்.
இந்தப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நீங்கள் டான்ஸ் ஆட வேண்டும் என்று டைரக்டர் பி.டி.செல்வக்குமாரும், பி.ஆர்.ஓ நிகில்குமாரும் என்னை வந்து கேட்டர்கள். நான் டான்ஸ் ஆடலாமா வேண்டாமா என்று யோசித்தேன்.
அப்போதுதான் அந்த பி.ஆர்.ஓ. “இவர் யார் தெரியுமா? இவர்தான் விஜய்யோட பி.ஆர்.ஓ.” என்று சொன்னார். விஜய் என்று சொன்னதும் நான் எந்த கேள்வியும் கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டேன்” என்றார் பவர் ஸ்டார் டபுள் கைதட்டலுடன். முதல் கைதட்டல், விஜய் பெயரை சொன்னதற்கு… அடுத்தது, பவர் பேசி முடித்ததற்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக