எச்சரிக்கை

" கொல கொலயா முந்திரிக்கா பவர் ஸ்டார் ர தொட்டா நீ கத்திரிக்கா "

வெள்ளி, 29 ஜூன், 2012

எனக்குப் போட்டியாளர் சூப்பர் ஸ்டார் ஒருவரே – பவர் ஸ்டார்



கடந்த சனிக்கிழமையன்று சேலத்தில் நடைபெற்ற ‘மெகா டிவி – அரசன் சோப்’ இணைந்து வழங்கிய லஷ்மண் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார் ‘பவர் ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன்.
அவரைக் காண்பதற்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் எழுப்பிய கேள்விகள் சிலவற்றுக்கு மேடையிலேயே அதிரடி பதில் தந்து அசத்தினார் பவர் ஸ்டார்.
  •  உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?
    உழைப்பால் உயர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மட்டுமே எனக்குப் போட்டியாளர். வேறு யாருமே இல்லை
  • உங்களுக்குப் பிடித்த நடிகை?
    உலக அழகி ஐஸ்வர்யா ராய்
  • ஒரு படத்திலே ஒன்பதாம் வகுப்பு மாணவனா நடிக்கிறீங்களாமே?
    ஆமாம். கதைப்படி அந்த வேடம் எனக்கு மிகவும் பொருந்தியது. அதான்.
  • உங்கள் எதிர்ப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
    கொல கொலயா முந்திரிக்கா. பவர்ஸ்டாரைத் தொட்டா கத்திரிக்கா
  • டைட்டானிக் படத்தை தமிழிலே எடுத்து அதிலே ஹீரோவா நடிக்கப் போறீங்களாமே?
    அப்படி ஒரு திட்டம் இருக்குது. நமக்குப் புடிச்ச படம் அது.
  • நீங்க நிறைய பேருக்கு வெளியே தெரியாம உதவுறீங்களாமே?
    சமீபத்திலே மதுரையிலே ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மையத்திலேர்ந்து ஒருத்தரு வந்தாரு. “உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்யா?”ன்னு கேட்டேன். “அதெல்லாம் வேண்டாம். எங்ககிட்ட ஒரு அறுபது பசங்க இருக்காங்க. அவங்க யாருமே மெட்ராஸ் பாத்ததேயில்லை.அவங்க மெட்ராஸை சுத்திப் பார்க்க நீங்க தான் உதவணும்” அப்படீன்னு கேட்டாரு. உடனே அவங்க எல்லாருக்கும் ஏ.சி. ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்து மெட்ராஸிலே வந்து தங்க வெச்சு மூணு நாள் சுத்திக் காமிக்க வெச்சேன். அத்தனை பேருக்கும் ரொம்ப சந்தோஷம். எனக்கும் ரொம்ப சந்தோஷம். இதே மாதிரி என்னோட பல லட்சக்கணக்கான ரசிகர்களும் என் கூட சேர்ந்தாங்கன்னா நாம நிறைய நல்ல விஷயங்கள் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக