எச்சரிக்கை

" கொல கொலயா முந்திரிக்கா பவர் ஸ்டார் ர தொட்டா நீ கத்திரிக்கா "

சனி, 2 ஜூன், 2012

நாளைய எம்ஜியார் பவர் ஸ்டார் சீனிவாசனே! அடுத்த தமிழக முதல் அமைச்சர் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் மட்டுமே! 

எம்ஜியாரும் இவரும் மக்களை வசப்படுத்துவதில் வல்லவர்கள்; ஆனால், இவர் எம்ஜீயரை விட மிக நல்லவர், பொறுமைசாலி. அன்றைக்கு சீனிவாசனைக் கேட்ட மாதிரி எம்ஜீயாரைக் கேட்டிருந்தால், கதையே வேற!

முதலில், சீனிவாசனைப் பாப்போம்: இவர் இப்பொழுதே 200 குடும்பங்களை காப்பாற்றுகிறார். பல தொழில்கள் செய்கிறார். இன்னொருவர் பணத்திற்கு ஆசைப் படாமல் சுயமாக நிற்கிறார். படம் எடுக்கிறார்; பல குடும்பங்களை காப்பாற்றுகிறார். தேர்ந்த அரசியல்வாதி மாதிரி கோபத்தைக் காட்டாமல் அமைதியாக எதிரியை எதிர் கொள்ளுகிறார். இவர் தான் நம் வருங்கால எம்ஜியார்; தமிழகத்தின் முதல் அமைச்சர் மற்றும் விடிவெள்ளி!
 
இந்தியாவில் இருக்கும் எந்த முதல் அமைச்சருக்கும் இவர் குறைந்தவர் இல்லை. கமிஷன் வாங்குவது மட்டும் தான் இந்தியாவில் முதல் அமைச்சர்கள் செய்யும் வேலை; அதையும் அவர் செய்ய மாட்டார்! நல்லவர்! 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக